வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் வலு குறைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் திருச்சி, நாமக்கல்லிலும் கனமழை பெய்யும் என்றும், நவம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வங்கக்கடல் மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இன்று மதியம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் 80 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினத்தில் தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டிடை, பேராவூரணியில் 16 செ.மீ. மழையும் நெய்வேலியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதாச்சலம், செங்கல்பட்டில் 12 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: