வேலைவாய்ப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 2 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றன

டெல்லி: வேலைவாய்ப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 2 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகளாவிய பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் தகுதி குறித்த ஆய்வு, டைம்ஸ் ஹையர் எஜூகேசன் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் 2 கட்டங்களாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட 22 நாடுகளில்  இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முதல் 10 இடங்களில் 6 இடங்களையும், முதல் 150 இடங்களில் 34 இடங்களையும் பிடித்துள்ளன. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களும், முதல் 10 இடங்களில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., 28-வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 145-வது இடம் பிடித்த டெல்லி ஐஐடி, இந்த ஆண்டு 53-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐஐஎம் மும்பையும் 144-வது இடம் பிடித்துள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: