கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம்; திண்டுக்கல், கரூரில் கன மழை; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் 80 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், கரூர், தேனி மற்றும் திருச்சியில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரியிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினத்தில் தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டிடை, பேராவூரணியில் 16 செ.மீ. மழையும் நெய்வேலியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதாச்சலம், செங்கல்பட்டில் 12 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: