புரட்டி போட்ட கஜா புயல்; 12 ஆயிரம் மின் கம்பங்கள்... செல்போன் டவர்கள்... ஏராளமான மரங்கள் முறிவு

நாகை: கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

alignment=

வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்துள்ளன. கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சீராக 2 நாட்கள்

கஜா புயலால் நாகை மாவட்டம் சீர்குலைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இந்த நிலையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும், பல்வேறு மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: