கஜா புயல் கரையை கடந்தாலும் 100கி.மீ வேகத்தில் காற்று வீசும் : தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை : கஜா புயல் கரையை கடந்த பிறகும் தீவிர புயலாகவே உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தற்போது கஜா புயலானது புதுக்கோட்டை மாவட்டத்தை அடைந்துள்ளதாகவும், இது ஒரு அரிய நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கனமழையுடன், பலத்த காற்றுடன் மணிக்கு 100கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. இதே போல் புயல் கரையை கடக்கும் போது நாகை,திருவாரூர், தஞ்சாவூமற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சூறைக்காற்று வீசியதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

கஜா புயல் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது, புயல் கரையை கடக்கும் போது சுமார் 100 முதல் 110கி.மீ வரை காற்று வீசியதாக பதிவிட்டுள்ளார். இதில் அதிகபட்சமாக அதிரமாபட்டினத்தில் மணிக்கு 111கி.மீ வேகத்திலும்,நகையில்  100கி.மீ வேகத்திலும்,காரைக்காலில் 92கி.மீ வேகத்திலும் காற்று வீசியுள்ளது.

புதுக்கோட்டை,வடக்கு சிவகங்கை , தெற்கு திருச்சி , தெற்கு கரூர் , திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும் என்றும் இந்த காற்றின் வேகம் அதிமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் சிவகங்கை, தேனி , திண்டுக்கல்,மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் ,கனமழை  பெய்யும் என தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் கஜா தற்போது பாதிப்புகள் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: