தீவிர புயலாக இருந்த கஜா வலுவிழந்து புயலாக மாறியது : இந்திய வானிலை ஆய்வு மையம்

நாகை: தீவிர புயலாக இருந்த கஜா வலுவிழந்து புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் வலு குறைந்துதாலும் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது அதிராம்பட்டினத்தில் இருந்து மேற்கே 20 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது.

இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது. மரங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

உருக்குலைந்த நாகை

கஜா புயலால் நாகை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக நாகை ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்துள்ளது. அதிக இடங்களில் மரங்கள் முறிந்து கிடக்கின்றன. மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டும், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாகையில் வீசிய புயல் காற்று காரணமாக ரயில் நிலைய மேற்கூறை சேதமடைந்துள்ளது.

22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயல் காரணமாக 22 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி ஆகிய மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: