சிசிடிவி கேமரா மூலம் வீட்டை கண்காணிக்கும் முதல்வர் லாலு மகன் தேஜஸ்வி குற்றச்சாட்டு

பாட்னா: ‘‘சக்திவாய்ந்த சிசிடிவி கேமிராவை பக்கத்து வீட்டு சுற்றுச்சுவரில் பொருத்தி, எனது வீட்டை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்காணிக்கிறார்’’ என எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசு இல்லம் தலைநகர் பாட்னாவில் உள்ள சர்க்குலர் ரோட்டில் அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு பின்னால் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் வீடு உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் வீட்டின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரில் திடீரென சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: முதல்வர் வீட்டுக்கு 3 பக்கமும் மெயின் ரோடுகள் உள்ளன. அவரது வீட்டுக்கு பின்புறம் எனது பங்களா உள்ளது.

பின்புறம் உள்ள சுற்றுச்சுவரில் மட்டும், எனது வீட்டை நோக்கி சக்தி வாய்ந்த சிசிடிவி கேமிரா வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்னை கண்காணிப்பதற்காக, இந்த கேமரா பொருத்த யாரோ ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த முயற்சி எந்த பயனும் அளிக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங், ‘‘கிரிமினல்களுடன் சேர்ந்து பழகுவது அம்பலமாகிவிடும் வாய்ப்புகள் உள்ளது என தேஜஸ்வி நினைப்பதுபோல் தெரிகிறது. அதனால்தான் அவர், வீட்டின் சுற்றுச்சுவரில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு கோபப்படுகிறார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: