சில்லி பாயின்ட்

* ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி முடியும் நிலையில், அடுத்ததாக உலக கோப்பை ஒருநாள் தொடர் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. எனவே உலக கோப்பைக்கு தேர்வாகும் வீரர்கள், அதற்கு முன்பாக மே மாத துவக்கத்தில் தொடங்கும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல்லின் கடைசி வார போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலிருந்து ஷிகார் தவான், விர்திமான் சாஹா, பிராத்வெயிட், ஹேல்ஸ் உட்பட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பரிமாற்ற முறைப்படி தவான், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தரப்பட்டுள்ளார். துணைக் கேப்டனான டேவிட் வார்னர் (ஆஸி.) உட்பட 17 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், வங்கதேசத்தின் முஷ்டாபிசுர், தென் ஆப்ரிக்காவின் டுமினி, இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா உள்ளிட்ட 10 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் ஷர்மா, குருணல், ஹர்திக் பாண்டியா, பூம்ரா உள்ளிட்ட 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி யுவராஜ் சிங், அக்‌ஷர் படேல், ஆரோன் பிஞ்ச் உள்ளிட்ட 11 பேரை விடுவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி கடந்த சீசனில் ஏலத்தில் ரூ.11.5 கோடி கொடுத்து எடுத்த பந்துவீச்சாளர் உனாத்கட்டை விடுவித்துள்ளது. 12வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ‘‘மிகச்சிறந்த இந்திய அணிகளுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். ஆனால் தற்போதுள்ள அணி அவர்களை விட சிறந்தது என்பதை உறுதியாக கூற முடியாது’’ என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: