எப்போ தேதி கிடைக்கும்.. எப்போ திறக்க போறாங்க.. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் எழும்பூர் நீதிமன்றம், 15 கட்டிடங்கள்

* செலவு செய்த பல கோடி ரூபாய் வீண்

* பல லட்சம் வாடகை கொடுக்கும் அவலம்

சென்னை: சென்னையில் பல கோடி செலவில் கட்டப்பட்ட எழும்பூர் நீதிமன்றம் உட்பட 16 அரசு கட்டிடங்கள் முதல்வரின் தேதி கிடைக்காமல் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் நீதித்துறை, பள்ளிகல்வித்துறை, வணிக வரி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு தமிழகம் முழுவதும் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.1000 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை ெகாண்டு பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுபோன்ற கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னரே அந்த கட்டுமான பணிகளுக்கு இடத்தை தேர்வு செய்வது, நிதியை ஒதுக்கீடு செய்வதற்கே 6 மாத காலத்திற்கு மேல் ஆகும். அதன்பிறகு டெண்டர் விட்டு, கட்டுமான பணிகளை தொடங்குவதே பெரும் சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலையில்தான், சென்னை மாவட்டத்தில் எழும்பூர் நீதிமன்றம், மாணவர் விடுதி கட்டிடம் உட்பட 16 அரசு கட்டிடங்களில் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், அதுதொடர்பான விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கட்டிடங்களின் திறப்பு விழாவிற்காக முதல்வரின் தேதி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வரை ேநரம் கிடைக்காததால் புதிய அரசு கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,  ‘சென்னை கோட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், நீதிமன்றம், மாணவர் விடுதிகளுக்கான  புதிய கட்டிடம் கட்ட சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், இப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், 2 ஆண்டுகளாக பல்வேறு புதிய கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த புதிய கட்டிட பணிகள் 6 மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிந்த கட்டிடங்கள் பட்டியல் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால், தற்போது வரை அந்த கட்டிடங்கள் திறந்து வைக்க முதல்வர் தேதி ஒதுக்கீடு ெசய்யவில்லை. இதனால், கட்டுமான பணிகள் முடிந்தும், அரசு அலுவலகங்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது தனியார் கட்டிடங்களில் அந்த அரசு அலுவலகங்கள் லட்சக்கணக்கில் வாடகை செலுத்தும் நிலைதான் உள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: