தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை சாலை விபத்தில் 10,378 பேர் உயிரிழப்பு: கடந்த ஆண்டைவிட 26 சதவீதம் குறைவு

சென்னை:தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையின் கீழ் இயங்கும் மாநில சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது போக்குவரத்து ஆணையர் தமிழகத்தில் விபத்து பற்றிய விவரங்களை குழுவிற்கு எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஜனவரி 2017 முதல் அக்டோபர் 2017 வரை 14,077 பேர் சாலை விபத்தில் இறந்தனர். இது ஜனவரி 2018 முதல் அக்டோபர் 2018 வரை 10,378 ஆகும். இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

2017ம் ஆண்டு அக்டோபர் வரை 5,559 கொடுங்காய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபர் வரை 5,051 கொடுங்காய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. மேலும், மொத்த உயிரிழப்பு விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் மட்டும் 32 சதவீதமும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 25 சதவீதமும் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் இறந்தவர்களில் 75 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்டதாகும். நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் 2017ம் ஆண்டு 297 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் சீட் பெல்ட் அணியாதது, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசி வாகனம் இயக்குதல், தலைக்கவசம் அணியாதது ஆகிய குற்றங்களுக்கு 2018ம் ஆண்டில் அக்டோபர் வரை மொத்தம் 2.77 லட்சம் ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

வாகனத்தின் பதிவு எண்ணை தானாக கண்டறிந்து புகைப்படம் எடுக்கும் கருவியை சோதனை முறையில் செங்கல்பட்டில் இருந்து திருச்சி வரை 280 கி.மீட்டருக்கு பொருத்தி அதிவேகமாக செல்லும் வாகனங்களை தானாக கண்டுபிடித்து கணினி மூலமாக அபராதம் விதிக்க நடைமுறைப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: