டிசம்பர் 7ல் சட்டப்பேரவை தேர்தல் தெலங்கானாவில் மாவோயிஸ்ட் மிரட்டலை எதிர்கொள்ள தயார்: வடக்கு மண்டல ஐஜி பேட்டி

ஐதராபாத்: அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க மிரட்டல் விடுத்துள்ள மாவோயிஸ்ட்களின் மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகி ரெட்டி தெரிவித்தார். தெலங்கானாவில் அடுத்த மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கரை ஒட்டியுள்ள இந்த மாநில எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இது தவிர சட்டீஸ்கர் அருகேயுள்ள ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்ட்கள் பேனர்கள், போஸ்டர்கள் வைத்துள்ளனர். இதையடுத்து, 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில்  மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமுள்ள 13 தொகுதிகள் மிக அபாயகரமான தொகுதிகளாக தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.  அங்கு காலை 7 மணி தொடங்கி 4 மணிக்குள் வாக்குப்பதிவை நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மாவோயிஸ்ட் மிரட்டலை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற் ெகாண்டுள்ளதாக மாநில போலீஸ் அறிவித்துள்ளது.

தெலங்கானாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டீஸ்கர் எல்ைலயையொட்டிய பத்ராச்சலம் மண்டலத்தில் செயல்படும்  மாவோயிஸ்ட்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்துள்ளது. இது தொடர்பாக  வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகி ரெட்டி கூறியதாவது: தேர்தலை சீர்குலைக்கும் மாவோயிஸ்ட்களை தடுக்கும் விதமாக நக்சல் எதிர்ப்பு உயர் அடுக்கு படையினர் பல்வேறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு படைகள் பணியில் ஈடுபட்டுள்ளது. மாவோயிஸ்ட்களின் எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். வாக்குப்பதிவு தடங்களின்றி நடைபெற மத்திய ஆயுத போலீஸ் படையினர், மாநில போலீசார், நக்சல் எதிர்ப்பு உயரடுக்கு படையும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன் 4 பேர் கொண்ட மாவோஸிட் குழு பூபால்பள்ளி மாவட்டத்திற்குள் நுழைந்தது. இந்த தகவல் போலீசுக்கு தெரிந்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து அவர்களது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: