பின்னி பன்சால் விவகாரத்தை தொடர்ந்து புதிய தொழில் நிறுவனங்கள் கலக்கம்

* மீ டூவால் சிக்கல் வருமோ என அச்சம்

* பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண முடிவு

புதுடெல்லி: பிளிப்கார்ட் உருவாக முக்கிய காரணமாக இருந்த பின்னி பன்சால், வால்மார்ட்டுக்கு நிறுவனம் கைமாறிய பிறகு பாலியல் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. எப்போதோ நடந்த சம்பவம் தொடர்பாக பெண் ஊழியர் அளித்த புகாரின்படி இந்த குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த பின்னி பன்சால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இந்த விவகாரம் சிறிய புதிய நிறுவனங்களிலும் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது. சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதில் நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஸ்டார்ட் அப் கலாசாரம் மிக பிரபலம் ஆகி வருகிறது.

இந்திய சந்தையில் வாய்ப்புகள் உள்ளதால், ஆன்லைன் வர்த்தகம், வாகன சேவை, நிதிச்சேவை தொடர்பான பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. ஆனால் ஒரு சில மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஆன்லைன் தளத்தில் புதிய புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன.  இவற்றை துவக்கியவர்கள், தலைமை பொறுப்பில், முக்கிய அதிகார மையத்தில் இருப்பவர்கள் இளைஞர்கள்தான். பெரும்பாலான நிறுவனங்களில் 20 அல்லது 25 வயது இளைஞர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளனர். பின்னி பன்சால் பாலியல் குற்றச்சாட்டில் வெளியேறியது இந்த நிறுவனங்களையும் சற்று கலக்கம் அடைய வைத்துள்ளது.

இதனால் இப்போேத நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சக பெண் ஊழியர்களுடன் அவர்கள் எவ்வாறு பழகுகிறார்கள் என பார்க்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் இருப்பவர்கள், நிறுவனர்களும் சக பெண் ஊழியரகளிடம் பழகும்போது மிக கவனமாக இருக்க துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  எப்போதோ சாதாரணமாக பேசிய வார்த்தை, அல்லது சகஜமான ஏதோ ஒரு செயல்பாடு கூட பின்னாளில் பன்சாலுக்கு நேர்ந்தது போல சிக்கலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக உஷாராக செயல்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரணமாக ஜோக் அடிப்பதற்கு கூட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 பிற நாடுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உள்ளது போல இந்தியாவில் இல்லை. இங்கு பெரும்பாலும் ஆண்களே நிறுவனத்தை இயக்குபவர்களாக, தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களாக விளங்குகின்றனர். இதனால் சக பெண் ஊழியர்களிடம் இவர்களின் போக்கில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பின்னினபன்சால் விஷயத்தில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. இருப்பினும் சில சூழ்நிலைகளில் அவரது செயல்பாடுகள் வெளிப்படை தன்மை கொண்டதாக இல்லை எனவும், அவரது முடிவுகளில் குறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது.

 எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சக ஊழியர்களுடன் எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும், பெண் ஊழியர் குற்றம் சுமத்தியிருந்தாலும் அவற்றுக்கு உடனடியான முழுமையான தீர்வு காண வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: