அக்டோபரில் ஏற்றுமதி 17.86% சரிவு

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 17.86 சதவீதம் உயர்ந்துள்ளது. 2,698 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  இறக்குமதியும் 17.62 சதவீதம் உயர்ந்து 4,411 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,713 கோடி டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி 42.9 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

 நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை ஏற்றுமதி 13.27 சதவீதமும், இறக்குமதி 16.37 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன்படி வர்த்தக பற்றாக்குறை 3,024.7 கோடி டாலராக உள்ளது.   கச்சா எண்ணெய் இறக்குமதி 52.64 சதவீதம் உயர்ந்து 1,421 கோடி டாலருக்கு இறக்குமதி ஆகியுள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: