5 மாநில தேர்தல் களம்

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சட்டீஸ்கரில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. மற்ற மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல், மனுக்கள் பரிசீலனை நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னோட்டமாக கருதப்படுகிறது. எனவே, இதன் மீது அனைவரின் கவனம் திருப்பியுள்ளது. இம்மாநிலங்களின் தேர்தல் களத்தில் நடக்கும் சுவாரசிய விவரங்கள் இதோ;

அடடே... அப்படியா?  சொந்தமாக கார் இல்லாத கோடீஸ்வர முதலமைச்சர்:

ஐதராபாத்: தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். இவர், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கூட. இத்தேர்தலில் கஜ்வேல் தொகுதியில் போட்டியிடும் அவர், நேற்று முன்தினம் தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2014 தேர்தலில் இவர் தன்னை ‘தொழிலதிபர்’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், 2012, 2014 தேர்தல்களில் தனக்கு முறையே 6.59 கோடிக்கும், 16.94  கோடிக்கும் சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டினார்.

இவற்றுடன் ஒப்பிடுகையில், கடந்த 4 ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு 5.5 கோடி அதிகரித்துள்ளது. 16 ஏக்கர் விவசாய நிலத்தை புதிதாக வாங்கியுள்ளார். இவருடைய கட்சியின் தேர்தல் சின்னம் கார். ஆனால், தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை குறிப்பிட்டுள்ளார். அசையும், அசையா சொத்துக்கள் 22.61 கோடி. கடந்த தேர்தலில் 37.70 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறிய ராவ், இப்போது 54.24 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார். தெலங்கானா தனி மாநில போராட்டம் தொடர்பாக தன் மீது 64 குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

‘ஏ இந்தா... ஏ இந்தா...’வாக்குறுதிகளை அள்ளி வீசும் வசுந்தரா ராஜே:

குவாலியர்: முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜ ஆட்சி நடத்தும் மாநிலம் ராஜஸ்தான். ‘காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்’ என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ள ஒரே மாநிலம் இதுதான். இங்கு ஒரு சுவாரசியம் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளில் எந்த ஆளும் கட்சியும் 2வது முறையாக ஆட்சியை பிடித்தது கிடையாது என்பதுதான் அது.  வசுந்தரா ராஜே மிகப்பெரிய வாக்குறுதி பட்டியலுடன் மக்களை சந்திக்கிறார். கடந்த தேர்தல் முதல் இப்போது வரை 611 வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

அவற்றில் எத்தனை நிறைவேற்றி இருக்கிறார் என கணக்கு பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே இல்லை என்கிறது காங்கிரஸ். மாநிலத்தில் பெண் ஒருவர் முதல்வராக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 பலாத்கார வழக்குகள் பதிவாகின்றன. அப்படி என்றால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு  எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் இம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்.

்அம்ம்ம்ம்மா... தாயே....சில்லறையை கொட்டிய குறும்புக்கார சுயேச்சை:

ராய்பூர்: சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.  இந்நிலையில், 2வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள காவர்தா தொகுதியில் போட்டியிடும் சுனில் சாஹு என்ற சுயேச்சை வேட்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, டெபாசிட் பணம் பத்தாயிரத்தை ஒரு ரூபாய், 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக பைகளில் வைத்து 50 தொண்டர்களுடன் வந்து செலுத்தினார்.

முதலில் இந்த காசுகளை வாங்க மறுத்த தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டால் வேறுவழியின்றி அவற்றை வாங்கி எண்ணினர். கணக்கு கரெக்ட்டாக இருந்தது.. ‘இந்த சில்லறைகள எங்கய்யா பிடிச்சீங்க?’ என்ற கேள்விக்கு, ‘எனக்கு தொகுதி மக்கள் நன்கொடை கொடுத்தனர்’’ என்று கூலாக சொன்னார் சுனில்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: