காங்கிரஸ் காலாவதியான காசோலை ஆகி விட்டது: ராஜ்நாத் சிங் கருத்து

ராய்ப்பூர்: “நாட்டில் காங்கிரஸ் காலாவதியான காசோலை ஆகி விட்டது” என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கரில் சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 2ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாஜ சார்பில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘நக்சல்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்து வருகிறார்கள். முன்பு, நாடு முழுவதும் 90 மாவட்டங்களில் நக்சல் ஆதிக்கம் இருந்தது. தற்போது இது 10-11 மாவட்டங்களாக குறைந்துள்ளது.

அடுத்த மூன்று முதல் 5 ஆண்டுகளில் நாட்டில் இருந்து  நக்சல்கள் முழுமையாக அகற்றப்பட்டு விடுவார்கள். நாட்டில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாகி விட்டது. அது தனது பலத்தை இழந்து விட்டது. சட்டீஸ்கரில் அது தனது முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காததற்கு அதுதான் காரணம். அது நம்பகத்தன்மை பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல், எதிர்க்கட்சிகள் அனைத்தும் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்து தவிக்கின்றன. காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்பதை காட்டுகிறது. அக்கட்சி காலாவதியான வங்கி காசோலை போன்றது. அழிவின் விளிம்பில் உள்ளது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: