பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: சாகித் அப்ரிடி கருத்துக்கு ராஜ்நாத் சிங் வரவேற்பு

சத்தீஸ்கர்: காஷ்மீர் மாநிலம் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார். லண்டனில் பேட்டி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, ‘‘பாகிஸ்தானுக்கு  காஷ்மீர் தேவையில்லை. ஆனால், காஷ்மீர் சுதந்திரம் பெற அனுமதிக்கப்பட வேண்டும். அங்கு மக்கள் மடிந்து வருகிறார்கள். அப்பாவிகள் மரணம்  கவலையை  அளிக்கிறது.  பாகிஸ்தானில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. காஷ்மீரின் நான்கு மாகாணங்களைக் கூட பாகிஸ்தானால் கையாள முடியாது.

ஆனால், காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். காஷ்மீரை இந்தியா விட்டுத்தந்தது போன்று, அதை காஷ்மீர் ஏற்க கூடாது என்பது போன்ற தோரணையில் ஷாகித் அப்ரிடி கூறினார். காஷ்மீர் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்து கூறுவார். தற்போது மீண்டும் அவர் காஷ்மீர் குறித்தும், தன் நாட்டையே கிண்டல் செய்தும் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கூறுவது சரி தான் என்று தெரிவித்துள்ளார்.  சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: