ஜப்பான் விமானத்தில் ஜன்னலோர இருக்கை கேட்டு அடம்பிடித்த பயணி: காகிதத்தில் ஜன்னல் கொடுத்த பணிப்பெண்

ஜப்பான்: ஜப்பான் விமானத்தில் ஜன்னலோர இருக்கை கேட்டு அடம்பிடித்த பயணிக்கு விமானப் பணிப்பெண் வெள்ளைக் காகிதத்தில் ஜன்னலை வரைந்து கொடுத்து நிலைமையை நகைச்சுவையாக சமாளித்தார். விமானங்களில் பயணிகளின் பல்வேறு புகார்களை பணிப்பெண்கள் எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் ஜப்பான் விமானம் ஒன்றில் ஜன்னலோர இருக்கை கேட்டு பயணி ஒருவர் அடம்பிடித்துள்ளார். பயணியிடம் வேறு இருக்கை இல்லை என எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த விமானப் பணிப்பெண் பெரிதும் முயற்சித்தார். ஆனால் பயணி சற்றும் இறங்கி வராத நிலையில் விமானப் பணிப்பெண் மாற்று வழியை யோசித்தார்.

பின்னர் விமான ஜன்னல், கடல் மேகங்கள் ஆகியவற்றை சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போல ஒரு காகிதத்தில் வரைந்த பணிப்பெண், அதனை பயணிக்கு அருகே ஒட்டி வைத்தார். இதனால் தன்னை மறந்து சிரித்துவிட்ட பயணி தன் வலியுறுத்தலை கைவிட்டு சமாதானமானார். விமானப் பணிப்பெண் வரைந்த படம் இணையதளத்தில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: