ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான உடன்பாடு வரும் 25ம் தேதி கையெழுத்து

பிரிட்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25ஆம் தேதி  கையொப்பமாகும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில், அதற்குப் பிந்தைய உறவுகள் குறித்து மைக்கேல் பார்னியர் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின் இதுபற்றிய உடன்பாட்டு வரைவை ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்கிடம் அளித்தார். அதன்பின் பேசிய டொனால்டு டஸ்க், நவம்பர் 25ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பிரசல்சில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான உடன்படிக்கை கையொப்பமாகும் எனக் குறிப்பிட்டார். விலகிய பின் பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவு பற்றியும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரெக்ஸிட் வரைவு அறிக்கை குறித்து கடுமையான விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வருகிறது. வரைவு அறிக்கை பிரிட்டன் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரைவறிக்கை தொடர்பாக அதிருப்தி கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: