எகிப்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூனைகளின் உடல் கண்டுபிடிப்பு

கெய்ரோ: எகிப்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய எகிப்தில் பூனைகளை கடவுளாக கருதி வந்தனர். மன்னர் வம்சத்தினர் இறக்கும்போது அவர்களின் உடல்களுடன், வளர்த்த பூனைகளையும் மம்மிகளாக பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வந்தனர்.

எகிப்தில் தெற்கு கெய்ரோ பகுதியில் உள்ள 4000 ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கெய்ரோவில் உள்ள உஸர்காப் என்ற மன்னரின் கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, பதப்படுத்தப்பட்ட நிலையில் ஏராளமான பூனைகளின் உடல்களைக் கண்டறிந்தனர். இறப்பிற்கு பின் சிறப்பான இடத்தை பூனை மற்றும் சில விலங்குகள் அடைவதாக எகிப்தியர்கள் நம்பினர். அதன் பொருட்டு அவைகளுக்கு சிறப்பிடத்தை அளித்தனர்.

ஒரு கல்லறையில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை கடவுளின் சிலை இருந்தது. ஒரு வகை வண்டிற்கு சிறப்பு மரியாதை அளித்துள்ளனர். அதனை சூரிய கடவுள் என நம்பினர். மேலும் பூனைகளைப் போன்ற பொம்மைகள் மற்றும் பெரிய அளவிலான வண்டுகள் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பூனைகளின் உடல்களை அருங்காட்சியகத்தில் வைக்க அவர்கள் எடுத்துச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: