சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் மந்தமடையும் சூழலில், கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதோடு ஒப்பிடும்போது கச்சா எண்ணெய் சப்ளை அதிகரித்துள்ளதால், விலை குறையும் போக்கு காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பிரண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை, இன்று 0.3 சதவீதம் குறைந்து பேரலுக்கு 65.90 டாலர்களுக்கு வர்த்தகமானது. இதேபோல, WTI ரக கச்சா எண்ணெய், 0.5 சதவீதம் குறைந்து 55.95 டாலர்களுக்கு வர்த்தகமானது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உற்பத்தியை குறைப்பது பற்றி எண்ணெய் வள நாடுகள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிக மோசமாக சரிவடைந்தது.

இதனால், டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, இம்மாதம் முதல் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. கடந்த 10 ஆம் தேதியன்று ஒரு பேரலுக்கு 110.15 டாலர் குறைந்தது. ரூபாயில் பார்த்தால் ஒரு பேரல் ரூ.7404.67 லிருந்து ரூ.7073.83 ஆக குறைந்திருக்கிறது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் ரூ.65.96 லிருந்து நேற்று ரூ.63.37 ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறையும் வாய்ப்புள்ளது. இதனால், பெட்ரோல் விலையை சிறிது குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: