மனைவி மற்றொருவருடன் நெருக்கம்: கூகுள் மேப் புகைப்படத்தினால் விவாகரத்து பெற்ற தம்பதி

பெரு: கூகுள் மேப்பில் தன் மனைவி வேறொருவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை பார்த்த கணவன் மனைவியிடம் சண்டையிட்டு விவாகரத்து வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருவை சேர்ந்த நபர் ஒருவர் லிமா நகரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல வழி தெரியாத காரணத்தால் கூகுள் மேப்பில் வழி தேடியுள்ளார். கூகுள் மேப் சொன்ன வழியில் பயணித்துக்கொண்டிருந்த போது கூகுள் மேப்பில் புகைப்படம் ஒன்றை பார்த்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் மடியில் படுத்திருப்பது போல் இடம்பெற்றிருந்தது. அதை உற்று கவனித்த அந்த நபர் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெண் தன் மனைவி என்பதை கண்டறிந்தார்.

பின்னர் இதுகுறித்து மனைவியிடம் வினவியபொழுது வேறொருவருடன் தொடர்பு இருந்ததாக ஒப்புக்கொண்டு அது 2013ம் ஆண்டு எடுத்த புகைப்படம் என தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த கணவன் மனைவியிடம் வாக்குவாதம் செய்து இந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்து விவாகரத்து பெற்றுள்ளார். கூகுள் கேமராவால் படம்பிடிக்கப்பட்ட இதுபோன்ற புகைப்படங்கள் தம்பதியினரிடையே பிரிவை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: