தடகள வீராங்கனை ஹீமா தாசை இந்திய இளையோரின் தூதராக நியமித்தது யுனிசெப் அமைப்பு

டெல்லி: தடகள வீராங்கனை ஹீமா தாசை யுனிசெப் இந்தியா அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது. உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். பின்லாந்து நாட்டின் டாம்பெரே நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்த தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற ஹிமா தாஸ், 51.46 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார்.

Advertising
Advertising

இவருக்கு இந்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது ஹீமா தாசை யுனிசெப் இந்தியா அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹிமா தாஸ் 50.79 விநாடியில் பந்தயதூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: