தமிழகத்தை நெருங்கியது கஜா புயல்... 3 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: கஜா புயல் காரணமாக 3 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை , புதுச்சேரி, கடலூர் ஆகிய மூன்று துறைமுகங்களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கஜா புயல் சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும், நாகை இருந்து 400 கி.மீ.தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அது தற்போது மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே நாகை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக 3 பல்கலை. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கஜா புயலையொட்டி காரைக்குடி அழகப்பா பல்லை. அனைத்து தேர்வுகளும், அண்ணா பல்கலை.யில் அனைத்து தேர்வுகளும், திருச்சி பாரதிதாசன் பல்கலை. அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: