விசாரணையில் வாலிபரிடம் மோதிரம் தங்க சங்கிலி பறிப்பு

சென்னை : சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்(31). இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  கடந்த 2013ம் ஆண்டு ஒரு புகாரின் அடிப்படையில் அப்போதைய புழல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த  பாபு ராஜேந்திரபோசும், எஸ்.ஐ மணி ஆகியோர் விசாரணைக்காக நள்ளிரவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நிர்வாணமாக்கி அடித்து தாக்கினர். மேலும் நான் அணிந்திருந்த தங்க மோதிரம், சங்கிலி போன்றவற்றை பறித்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த மனு மாநில மனித உரிமை ஆணையத்தின்  நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ், எஸ்.ஐ மணி ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.  எனவே, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கி இருவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்’’ என்று  உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: