தாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மோமினுல் 161 ரன், முஷ்பிகுர் 219* ரன், மிராஸ் 68* ரன் விளாசினர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஜார்விஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 304 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பீட்டர் மூர் 83 ரன், பிரெண்டன் டெய்லர் 110 ரன் விளாசினர். சதாரா காயம் காரணமாக பேட் செய்யவில்லை. வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜிம்பாப்வே அணி 218 ரன் பின்தங்கிய நிலையில், வங்கதேச அணி பாலோ ஆன் கொடுக்காமல் நேற்று 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.