கயானா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதியில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது. புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா டாசில் வென்று பேட் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. மூனி 26, அலிஸா ஹீலி 53, ரச்சேல் ஹேன்ஸ் 29* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17.3 ஓவரில் 120 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சூஸி பேட்ஸ் 48 ரன், கேத்தி மார்டின் 24, காஸ்பரெக் 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர் (2 பேர் டக் அவுட்). ஆஸி. பந்துவீச்சில் ஷுட் 3, மோலினக்ஸ், கிம்மின்ஸ் தலா 2, பெர்ரி, வாரிஹம், கார்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.