மரண தண்டனையை ஒழிக்கும் ஐநா வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

வாஷிங்டன்:  ஐ.நா.வின் மரண தண்டனையை ஒழிப்பு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க ஐநா முயற்சி எடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐநா. பொதுச்சபை கூட்டத்தில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான வரைவு தீர்மானம் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதை ஆதரித்து 123 நாடுகள் வாக்களித்தன. 36 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அதில், இந்தியாவும் ஒன்று. வாக்கெடுப்பில் 30 நாடுகள் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக  ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பலோமி திரிபாதி கூறுகையில், “இந்தியாவில் மிகவும் அரிதிலும் அரிதான ஒரு சில வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்திய சட்டம் தேவையான அனைத்து நடைமுறை பாதுகாப்பையும் வழங்குகிறது. நீதிமன்றம் மூலம் நியாயமான விசாரணை, நிரபராதி என நிரூபிப்பதற்கான வாய்ப்பு, மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் இந்திய சட்டம் வழி வகுக்கிறது. எனவே, ஐநா.வின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: