மனைவியை ஆபாசமாக திட்டிய கணவன் கைது

சென்னை: கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சு (33). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசவார்த்தைகளால் திட்டியதாக சேலையூர் காவல் நிலையத்தில் மஞ்சு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்திக்கை நேற்று கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

* அடையாறு பெசன்ட் அவென்யூ சாலையில் உள்ள பொன்னியம்மன் கோயிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் கொள்ளையடித்து சென்றனர்.

* திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் தாம்பரம், ரமணி நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா (23) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*  பல்லாவரம் அடுத்த நங்கநல்லூரை சேர்ந்த மகேஷ்குமார் (32) என்பவரிடம் மணி கேட்பது போல் நடித்து, அவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

* அண்ணாபல்கலைக்கழகம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தி.நகர் பிரசாசம் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஸ்வநாதன் (51) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, மதுரையை சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுனர் மைக்கேல் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* சொத்து தகராறு காரணமாக விருகம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சஹானா (28) என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவன் குருதாஸ்(35) மற்றும் அவரது சகோதரி கவிதா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

* சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கொளத்தூர் தினேஷ் (எ) அப்பு (30), அன்னனூர் கிருஷ்ணகாந்த் (28), செங்குன்றம் நாரவாரிக்குப்பத்தை சேர்ந்த சகாயமூர்த்தி (26), பெரும்பாக்கம் ஆனந்தன் (22), ஆயிரம் விளக்கு முத்து (22), தி.நகர் சிவா (31) ஆகிய 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: