2ம் நாள் மாநிலக்குழு கூட்டம் கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

சென்னை: கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2ம் நாள் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில்  நடந்தது. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் வரதராசன், டி.கே.ரங்கராஜன்,  வாசுகி, சவுந்தரராசன், சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயல் கடலூர் முதல் ராமேஸ்வரம் வரை இந்த முறையும் பாதிப்புக்குள்ளாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டபோது மக்கள் தங்கள் உறவுகளையும், உடமைகளையும் இழந்து பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதிலிருந்து அமைச்சர்களின் அறிவிப்பு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. நானோ புயல், ஒகி புயல், வர்தா புயல், 2015ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு ஆகியவை மக்கள் மனதில் இந்த அரசின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். புயலும், கடும் மழையும் சேர்ந்து வரும் என்ற நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தேவையான பேரிடர் மீட்பு குழு, விமானம், ஹெலிகாப்டர் போன்ற வசதிகளை அளிப்பதுடன் தேவையான நிதியினையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: