நாட்டின் வளர்ச்சியை பின்நோக்கி கொண்டு சென்ற மோடி ஆட்சியை அகற்ற மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன : திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: ஜவஹர்லால் நேரு 130வது பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி கத்திப்பாராவில் அவரது உருவ படத்துக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் நேரு உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார் எம்எல்ஏ, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ரூபி மனோகரன், பிராங்க்ளின் பிரகாஷ், மண்டல தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சத்தியமூர்த்தி பவனில் நேரு படத்துக்கு திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்பி ராணி, மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, ஜான்சிராணி, அஸ்லாம் பாட்ஷா, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பேட்டியளித்த திருநாவுக்கரசர், ‘‘மோடி அரசை அகற்ற வேண்டும் என்பதற்காக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணந்துள்ளனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகையை உயர்த்தி வைக்கவும், அகற்றப்பட்ட அவரது புகைப்படத்தை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: