மயிலாடுதுறையில் கூட்டுறவு வங்கியில் 60 லட்சம் ஆன்லைனில் கையாடல் : 3 ஊழியர்களிடம் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் மூலம் 60 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்கள் 3 பேரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள நகர கூட்டுறவு வங்கி, தனது நடப்புக் கணக்கை (கரன்ட் அக்கவுன்ட்) சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் வைத்துள்ளது.  அந்தக்கணக்கிலிருந்து சென்னை வங்கி துணையுடன் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகிறது.  இந்நிலையில் கடந்த 3ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் 60 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டது திங்கட்கிழமை (12ம் தேதி) அன்று தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல்நிலைத்தில், வங்கி பொதுமேலாளர் பாலு  புகார் அளித்தார். ஆன்லைன் மோசடி என்பதால்  நாகை சைபர் கிரைமுக்கு போலீசார் மாற்றினர்.  இதையடுத்து  சைபர் கிரைம் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். விசாரணையில், மயிலாடுதுறை கிளையில் 3ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை வங்கி சார்பில் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. ஆனால் 7 முறையாக 60 லட்சம் குறிப்பிட்ட ஒருவர் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் மணிமாறன், முத்துக்குமரன் மற்றும் தையல்நாயகி ஆகியோரிடம் விசாரித்தனர். இதில், டெல்லியை சேர்ந்த சுரேஷ் என்பவரது எச்டிஎப்சி மற்றும் டிசிபிஎல் வங்கி கணக்குக்கு  7 முறை 60 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ெடல்லி எச்டிஎப்சி வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுரேஷிடம் விசாரிக்க போலீசார் கூறிஉள்ளனர். மேலும், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: