அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை : இபிஎஸ், ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, ராயப்பேட்டை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட முழு உருவ வெண்கல சிலை பற்றி வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு செய்தி வெளியானது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு புதிய சிலையை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் வடிவமைத்தார்.அங்கிருந்து லாரி மூலம் எடுத்து வரப்பட்ட புதிய சிலை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பழைய சிலை மற்றும் பீடம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் நேற்று முன்தினம் நிறுவப்பட்டது.

புதிய சிலைக்கு நேற்று காலை 9.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி , அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெயலலிதாவிற்கு அவமரியாதையா?

ஜெயலலிதாவின் சிலை நேற்று அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதை திறப்பதற்கு முன்பு சிலை மீது வேட்டியை போட்டு மூடி வைத்திருந்தனர். இந்த செயல் ஜெயலலிதாவை  அவமதிப்பது  போல் உள்ளது என்று தெண்டர்கள் கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிமுகவினரிடம் கேட்டபோது, இப்போது திறக்கப்பட்ட சிலை புதிய சிலை இல்லை என்ற காரணத்தால்தான் பூ போட்டு திறக்கப்பட்டது. எனவே, தொண்டர்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றனர்.‘அதிமுகவினரின் இந்த செயல் ஜெயலலிதாவின் லட்சோப லட்சம் தொண்டர்களின் மனதை வேதனையிலும், பெரும் கொதிப்பிலும் ஆழ்த்தியுள்ளது’ என டிடிவி.தினகரன் டிவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: