கடல் அலை, காற்று மற்றும் சூரிய ஒளி பயன்படுத்தி கடற்கரைகளில் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வழக்கு

மதுரை: கடற்கரைகளில் ஒருங்கிணைந்த மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கில், மத்திய அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடற்கரையில் ஒருங்கிணைந்த மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு மாதிரி திட்டத்தை தயாரித்துள்ளேன். இந்தியாவில் அதிகளவு பொருட்செலவுடன் பல்ேவறு முறைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து குறைந்த செலவில் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

கடல் அலை, காற்று மற்றும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகளை ஒருங்கிணைத்து கடற்கரை பகுதியில் மின் உற்பத்தியை மேற்ெகாள்ள முடியும். இதற்காக தனியாக நிலங்களை ஆர்ஜிதம் செய்ய தேவையில்லை. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கடற்கரை பரப்பே போதுமானது. குறைந்த செலவில் அதிகளவு மின்சாரத்தை எப்போதும் உற்பத்தி செய்ய முடியும். இந்த முறை மிகவும் பாதுகாப்பானது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்பில்லை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதிகளவு பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு ெபறுவர். கடற்கரை பகுதியும் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.

எனவே, ஒருங்கிணைந்த மின் உற்பத்தி செய்யும் மையத்தை அமைக்கவும், முன் மாதிரியாக முதலில் ஒரு மையத்தை அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், மனுதாரர் கூறும் மின் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 5க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: