தமிழகத்தில் தொடரும் அவலம்: பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 5 பேர் பலி

தூத்துக்குடி: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினம் தோறும் மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்புடன் சேர்க்கப் படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த அவலம் தொடர்கிறது.  பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சக்திகபிலன்(11).  சில்வர்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன், கடந்த 9ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளான்.

நேற்று முன்தினம் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சக்திகபிலன் இறந்தான். நேற்று காலை வந்த பரிசோதனை அறிக்கையில் மாணவனுக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. பாளை. ரயில்வே ஊழியர் குடியிருப்பை சேர்ந்த ஆறுமுகநயினார் (47). இவர், நெல்லையில் ரயில்வே டிராக்மேனாக பணியாற்றி வந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு மேல்சிகிச்சைக்காக மதுரை ரயில்வே மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் (36), தனியார் பால் பண்ணை ஊழியர். இவரது மனைவி சுமதி.

இவர்களது  4வயது மகள் சவுமியா(4), பன்றிக்காய்ச்சலுக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று சவுமியா இறந்தாள்.  நாமக்கல்லைசேர்ந்த பாரதிதாசன் (62), சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த சாரதா(60), பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாதம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி(55). இவர் மர்ம காய்ச்சலுக்கு நேற்றுமுன்தினம் இறந்தார். மொண்டிப்பட்டியை சேர்ந்த தூங்காயி என்ற காளியம்மாள்(70). மர்ம காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். மேலும் மோத்தபட்டியில் ஒருவரும், களத்துப்பட்டியில் ஒருவரும் மர்ம் காய்ச்சலுக்கு பலியாகினர்.

திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் மர்ம காய்ச்சலுக்கு பலி

திருப்பூர் குமார் நகரை சேர்ந்தவர் பாலு (52). இவர், திருப்பூர் மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளராக இருந்தார். கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றி முன்தினம் இறந்தார். அவருக்கு திேயட்டர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: