தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி டிவிட்டர் கணக்குகள் நீக்கம்

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி டிவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ெசய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் 2 டிவிட்டர் கணக்குகள் இயங்குவதாக அந்த அமைப்புக்கு தகவல் வந்தது. @election comm மற்றும் @dalitfederation என்ற பெயரில் இயங்கி வந்த அந்த டிவிட்டர் கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். அவை பொதுமக்களை தவறான பாதையில் வழிநடத்தி செல்ல வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் அச்சமடைந்தது.

இந்த கணக்குகளை ரத்து செய்யுமாறு டிவிட்டர் நிறுவனத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. மேலும் போலிக்கணக்குகள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் டிவிட்டரை கேட்டுக்கொண்டது. இதையடுத்து, அந்த இரு போலி டிவிட்டர் கணக்குகளையும் டிவிட்டர் நீக்கியுள்ளது. டிவிட்டரில் தேர்தல் ஆணையத்திற்கு என தனிக்கணக்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: