ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.20 கோடி ரொக்க பணம் மற்றும் 57 கிலோ  தங்கம்  பெற்றதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி பெங்களூரு விரைவு  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.ஜெகதீஷ்  முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது.

ஜனார்த்தன ரெட்டியை  ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸ்  தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். இரு  தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி  நேற்று வழங்கிய தீர்ப்பில், ரெட்டியை நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: