பாஜ மேற்கொண்டு வரும் நகரங்களின் பெயர் மாற்றத்தால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? சரத் பவார் கேள்வி

மும்பை: நகரங்களின் பெயர்களை பாஜ ஆளும் மாநில அரசுகள் மாற்றி வருவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கண்டனம்  தெரிவித்துள்ளார். நகரங்களின் பெயர்களை மாற்றுவதால் வறுமை மற்றும் வேலையின்மை போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடுமா?  என்று பவார் கேள்வி எழுப்பினார். நாட்டின் முதலாவது கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம்  மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ேபசிய சரத் பவார், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்போவதாக பேசிவரும் அரசியல் தலைவர்களுக்கு  நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்று கேட்டார்.

வறுமை, வேலையின்மை போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலாததால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நகரங்களின  பெயர்களை மாற்றும் வேலையில் பாஜ ஈடுபட்டுள்ளதாக சரத் பவார் குற்றம்சாட்டினார். “நாட்டில் நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.  நாட்டின் பெருமையாக விளங்கி வரும் தாஜ் மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் பெயரைக்கூட மாற்றப்போவதாக கேள்விப்படுகிறேன்.

இதற்கெல்லாம் என்ன தேவை ஏற்பட்டது? இப்படி செய்வதால் என்ன மாற்றம் ஏற்பட்டு விடும்? அது வேலைவாய்ப்புகளை அதிகரிக்கப்போகிறதா?  மக்களிடையே இதனால் சகோதரத்துவம் அதிகரிக்குமா? என்று சரத் பவார் கேள்வி எழுப்பினார். நேரு, போஸ், ஆசா போன்ற தலைவர்களின் வழியை  மத்திய அரசு பிபற்றி நாட்டை முன்னேற்ற வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: