நேருவின் 129வது பிறந்த நாள் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர்  உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். ஜவகர்லால் நேரு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் 1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி  பிறந்தார். நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். இவரது பிறந்தநாள் ஆண்டு ேதாறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது. நேருவின் 129வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு டெல்லி சாந்திவனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி  ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் டிவிட்டர் பக்கத்தில் நேருவை நினைவு கூர்ந்தனர். ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘நாட்டின் முதல் பிரதமர் நேருவை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்’ என்று  பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில், ‘முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவை அவரது பிறந்த நாளில்  நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும்  பிரதமராக பதவி வகித்த காலத்தில் நாட்டிற்கு ஆற்றிய அவரது பங்களிப்பை நினைவு கூர்வோம்’ என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளில், சுதந்திரம், ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கு  நம்மை மீண்டும் அர்ப்பணிப்பதே கவுரவிப்பதற்கான சிறந்த வழியாகும். இவற்றை தான் அவர் முக்கிய மதிப்புகளாக நம்பினார். இதற்காக தான்  போராடினார். இவை நம் நாட்டை ஒன்றிணைப்பவை’ என்று பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: