தீபாவளி வாழ்த்து வெளியிட்டு வாங்கி கட்டிக்கொண்ட டிரம்ப்

நியூயார்க்: தீபாவளி வாழ்த்தில், அதை கொண்டாடும் இந்துக்களை பற்றி குறிப்பிடாமல் வாழ்த்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் தன்  தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார். அமெரிக்க அதிபர் மாளிகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடும் நிகழ்ச்சி, இடைத்தேர்தலால்  சற்று தள்ளி வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய வம்சாவழியினருடன் அதிபர் டிரம்ப்  தீபாவளி கொண்டாடினார். இந்த விழா புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, ‘‘அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள புத்த  மதத்தினர், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியோரால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு நாங்கள் இன்று கூடினோம்.

இந்நாளில் அவர்கள் குடும்பத்துடன் கூடி விளக்குகளை ஏற்றி புது ஆண்டை வரவேற்கின்றனர்’’ என்று கூறியிருநதார். தீபாவளியை  கொண்டாடுவதில் முதலிடம் இந்துக்களுக்குத்தான். இது தெரியாமல் டிரம்ப் வெளியிட்ட பதிவினால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக  அவரது டிவிட்டரில் கருத்து வெளியிட்டனர். இதையடுத்து, அவசர, அவசரமாக அதிபர் டிரம்ப், தவறைத் திருத்திக் கொண்டு வேறு ஒரு பதிவை  வெளியிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: