நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் சந்திக்க தயார்: திருமாவளவன் பேச்சு

சென்னை: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சந்திக்க தயாராக உள்ளதாக திருமாவளவன்  பேசினார். திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டம் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் திருமாவளவன்  கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:. நடிகர் ரஜினிகாந்திடம் பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, அவர் ஆமாம், இல்லை என்ற  பதில் கூறியிருக்க வேண்டும். அதை விடுத்து 10 கட்சிகளை தனியாக எதிர்த்து நிற்கும் கட்சி என்பதால் பலமான கட்சி என ஒரு சம்பந்தமில்லாத  பதிலை கூறியுள்ளார். பாம்பை விட விஷத்தன்மை கொண்டது பாஜக. எனவே, பாஜக ஆபத்தான கட்சிதான்.

அதற்கான பதிலை ரஜினிகாந்த் நேரடியாக கூறியிருக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அதிமுகவும், பாஜகவும்  ஒன்று சேர்ந்து தீர்மானித்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் எப்போது நடந்தாலும், அதை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள், திமுக,  இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணியினர் தயாராக உள்ளோம். எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். திருச்சி  மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சீதாராம் ெயச்சூரி, சுதாகர் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல மாநில  தலைவர்களை அழைத்துள்ளோம். அவர்களும் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: