ரூபாய் மதிப்பு ஏற்றம்

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 36 காசு அதிகரித்து 72.31ஆக இருந்தது.  ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த  நிலையில் நேற்று ஏற்றம் கண்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஓராண்டில் இல்லாத அளவாக பேரல் 65 டாலராக சரிந்தது.  இதுபோல் ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் டாலர்களை விற்பனை செய்தன. வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்தன. இதனால் ரூபாய் மதிப்பு  வலுவடைந்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணியில் ரூபாய் மதிப்பு 72.18ஆகவும், பின்னர் மேலும் வலுவடைந்து 71.99ஆகவும்  இருந்தது. முடிவில் 72.31க்கு நிலை பெற்றது. பங்குச்சந்தைகளில் பெரிய பாதிப்பில்லை. சிறிதளவு சரிவு காணப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: