மொத்தவிலை பண வீக்கம் அதிகரிப்பு

புதுடெல்லி:  கடந்த அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பண வீக்க விவரங்களை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி  அக்டோபரில் மொத்த விலை பண வீக்கம் 4 மாதத்தில் இல்லாத அளவாக 5.28 சதவீதம் உயர்ந்துள்ளது. செப்டம்பரில் இந்த பண வீக்க அளவு 5.13  சதவீதமாகவும், கடந்த ஆண்டு அக்டோபரில் 3.68 சதவீதமாகவும் இருந்தது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி,  இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால், மொத்த  விலை பண வீக்கம் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை 18.44 சதவீதம் உயர்ந்துள்ளது.  உணவு பொருள் விலை அக்டோபரில் 1.49 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் எரிபொருள் விலை  உயர்வால் பண வீக்கம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 19.85 சதவீதமும், டீசல் விலை 23.91 சதவீதமும், சமையல் காஸ் விலை 31.39 சதவீதமும்  அதிகரித்துள்ளன என புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: