திருநள்ளாறில் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்க ஏற்பாடு

காரைக்கால்: காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலுக்கு வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக விடுதி கட்ட ெகால்கத்தாவை சேர்ந்த பக்தர் மனோஜ் குமார் போதர் ரூ. 1.50 கோடி நன்கொடை வழங்கி இருந்தார். இந்த நிதியில் கோயில் நிர்வாகம் விடுதி  கட்டி உள்ளது. அதேபோல் ரூ.1.20 கோடி மதிப்பில் கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் மதிப்பில் எமதீர்த்த குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. விடுதி, குடியிருப்பு ஆகியவற்றை புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று காலை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், எம்எல்ஏ கீதா ஆனந்தன், கலெக்டர் கேசவன், கோயில் நிர்வாக அதிகாரி விக்ராந்த் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் விடுதியில் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் கஜா புயல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: இன்று திறக்கப்பட்ட விடுதி முக்கியஸ்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எம தீர்த்துக்குள கரையில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதி ெசய்யப்பட்டுள்ளது. 8 வடிவிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். குளத்தின் சுவற்றில் கோயிலின் வரலாற்றை விளக்கும் படங்கள் வரையப்பட்டுள்ளது. திருப்பதியை போல் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தரிசனம், ஹோமம் ஆகியவற்றுக்கு டிக்கெட் பெற ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய ஏற்கனவே கோயில் நிர்வாகம் பல வசதிகளை செய்துள்ளது. இப்போது ஆன்லைன் முறை மேலும் பல வசதிகளை அளிக்கும். கோயில் நகர விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: