அருப்புக்கோட்டையில் அவலம்: குடிநீரில் கலந்து வரும் சாக்கடை நீர்'

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு தாமிரபரணி மற்றும் வைகை குடிநீர் திட்டம் முலம் நகருக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் நீரை தேக்கி வைத்து அதன்பின் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் தற்போது வார்டுவாரியாக சுழற்சி முறையில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.நேற்று நகராட்சி 14, 15வது வார்டுகளுக்கு உட்பட்ட அம்பலம் சாமிநாதன் தெரு, நத்தலிங்கம் தெரு, பத்திரம் சவுண்டு தெரு, தெட்சிணாமூர்த்தி கோவில் தெரு, கோட்டை சொக்கப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

அப்போது அம்பலம் சாமிநாதன் தெருவில் 20க்கு மேற்பட்ட வீடுகளில் குடிநீரும், வாறுகால் நீர், சாயக்கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் கருப்பு கலராக வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இதுவரை 5 முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் குடிநீரும், சாக்கடை கழிவுநீரும் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. தற்போது எங்கு பார்த்தாலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் தண்ணீரை குடிக்க பயமாக உள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை கூறியும் பலன் இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீருடன் குடிநீர் கலந்து வருவதை கண்டறிந்து குழாய்களை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: