கஜா புயல் எதிரொலி சென்னை -ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் இன்று மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து

சென்னை : நாளை மாலை கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, மேலும் சூறாவளி காற்று சுமார் 100கி.மீ வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 7மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில்(16851 ) இன்று ஒரு நாள் மட்டும் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல் சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் மற்றொரு ரயிலான சேது விரைவு ரயிலும்(22661 ) இன்று ஒரு நாள் மட்டும் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று(நவ 13) ஓகாவில் புறப்பட்ட 16734 ஓகா - ராமேஸ்வரம் விரைவு ரயில், நாளை மதுரை - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும்  ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: