நதிகளை மாசுபடுத்தியதற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: நதிகளை மாசுபடுத்தியதற்காக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்துள்ளது. பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகளை மாசுபடுத்தியதாக பஞ்சாப் அரசு மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த ஆறுகளை சுத்தப்படுத்த பஞ்சாப் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்  கூறப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், பஞ்சாப் அரசுக்கு அபராத தொகையாக ரூ.50 கோடி விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தொகையை 2 வாரத்திற்குள் பஞ்சாப் அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், ரவி, பியாஸ் சட்லஜ் ஆகிய நான்கு ஆறுகளுடன், செனாப் நதியும் பாய்வதால், ஐந்து ஆறுகளின் நிலம் என்ற பொருள் கொள்ளும் வகையில், பஞ்சாப் என அம்மாநிலம் பெயர் பெற்றது.

இதில், பியாஸ், சட்லஜ் ஆகிய ஆறுகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதிகளவில் மாசடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள ஆ.ஏ.பீ. உறுப்பினர்கள், இரண்டு நதிகளையும் மாசுபாட்டிலிருந்து தடுக்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்.ஜி.டி என்ற அமைப்பினை கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை நதிகளின் மாதிரி நீரை எடுத்து மாசுபாட்டிற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: