சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மீண்டும் வனசுற்றுலா திட்டம்

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்ட வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பொதுமக்களை அழைத்துச்செல்வதற்காக வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவியதால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வனச்சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதி பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை முதல் வனச்சுற்றுலா திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை முதல் வனச்சுற்றுலா திட்டம் மீண்டும் தொடங்கவுள்ளதால் , ஆன்லைன் முன்பதிவு  தொடங்கியதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: