எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார். பின்னர் அம்மா உணவகத்தில் அவர் உணவருந்தினார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தோரண நுழைவு வாயிலை திறந்துவைத்தனர். பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான நினைவு அஞ்சலட்டை மற்றும் சின்னத்தை அவர் வெளியிட்டார்.

நவீன இருதய அறுவை சிகிச்சை அரங்கம், நவீன ஒளி ஒலி அரங்கம், மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம், ரூ.1 கோடி செலவில் தைராய்டு பரிசோதனை திட்டம் உள்ளிட்ட 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவருந்தினர். இதைத் தொடர்ந்து உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் கூறிவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: