மணிக்கு 10 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வரும் 'கஜா' : வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீட்டரிலிருந்து 10 கி.மீட்டராக அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், நாகையிலிருந்து வடகிழக்கே 580 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து கிழக்கே 490 கி.மீ தொலைவிலும் தற்போது கஜா புயல் நிலைகொண்டுள்ளது. மேற்கு தென்மேற்கில் புயல் நகர்ந்து வலுகுறைந்து பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கஜா புயல் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும். இன்று இரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக மாறக்கூடும். காற்றின் அமைப்பை பொறுத்து புயலின் வேகம் இருக்கும்.

கஜா புயல் காரணமாக நாளை கடலூர், நாகை, காரைக்கால், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் . புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டார். தலைநகர் சென்னையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். புயல் கரையை கடக்கும் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களிலும் பரவலான மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என கூறினார். எனவே தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: