ஓசூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்... வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கூட்டமாக வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். ஓசூர் அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனத்தில் 40 காட்டு யானைகள் ஒரு வாரமாக முகாமிட்டுள்ளது. இரவு நேரத்தில் அங்கிருந்து வரும் யானைகள் பயிர் செய்யப்படுள்ள தக்காளி, கேழ்வரகு, போன்றவற்றை மிதித்து சேதப்படுத்தி விடுவதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளால் சாலமாவு, ராமாவரம், உள்ளிட்ட 10 கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என தெரிவித்துள்ளனர். முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் உடனடியாக அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: